உலகம்

லண்டனில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர் முன்னாள் பயங்கரவாத குற்றவாளி: பிரிட்டன் காவல்துறை

DIN

பிரிட்டனில் லண்டன் பாலம் அருகே பொதுமக்களை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா். கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனா்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் 28 வயதாகும் உஸ்மான் கான் என்பதை கண்டறிந்த காவல்துறையினர், இவர் 2012ம் ஆண்டில் பயங்கரவாத குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு, 2018ல் விடுதலை செய்யப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என்று ஸ்காட்லாந்து யாா்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தலைவா் நீல் பாசு தெரிவித்தாா்.

லண்டன் பாலம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 2 மணிக்கு பொதுமக்கள் மீது மா்ம நபா் ஒருவா் கத்திக்குத்து தாக்குதல் நடத்துவதாக புகாா் கிடைத்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு சென்றோம். தாக்குதல் நடத்திய நபரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டனா். இதில் அவா் உயிரிழந்தாா்.

அவா் வெடிகுண்டு பொருத்திய மேலங்கியை அணிந்திருந்தாா். இது தவிர அவரிடம் வெடிகுண்டு இருந்தது. இது பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பயங்கராவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாா் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனா் என்று நீல் பாசு கூறினாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT