உலகம்

பாரீஸ் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மக்கள் வெளியேற்றம்

DIN

பாரீஸில் மிகவும் பரபரப்புடன் காணப்படும் காரே டூ நார்ட் ரயில் நிலயைத்துக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 

இதனைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற சோதனையில் மர்ம பை ஒன்றில் இருந்து வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. லண்டன் மற்றும் நெதர்லாந்து கத்திக்குத்து சம்பவங்களைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டது.

ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனைகளின் காரணமாக பொதுமக்கள் சுமார் 40 நிமிடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் இதர ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்பட்டதாக ரயில்வேத்துறை நிறுவனமாக எஸ்என்சிஎஃப் தெரிவித்துள்ளது.

பலமுறை போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது இச்சம்பவத்தை தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT