உலகம்

லாரி செல்லும்போதே இடிந்து விழுந்த பாலம்: வைரலாகும் சிசிடிவி காட்சி (விடியோ உள்ளே)

தைவான் நாட்டில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான விடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

DIN


தைவான் நாட்டில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான விடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

தைவான் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நான்ஃபான்கோ எனுமிடத்தில் உள்ள மிகப்பெரிய மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 14 பேர் படுகாயமடைந்தனர். விபத்து காரணமாக அங்கிருந்த படகுகள், வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

இதன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்நாட்டு தேசிய தீயணைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இடிபாடுகளில் 6 பேர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.  

இந்நிலையில், இந்த மேம்பாலம் இடிந்து விழும் காட்சி சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த விடியோவில் ஒரு லாரி சினிமா காட்சி போல் பாலத்தின் விளிம்பை எட்டிய நிலையில், அதன் பின்பகுதி விபத்தில் சிக்கியதால், மொத்த லாரியும் விபத்துக்குள்ளானது. 

இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT