உலகம்

ஐ.நா., பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு இடையே ஒத்துழைப்பு அவசியம்

DIN

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஐ.நா. சபை, பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) உள்ளிட்டவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா.வின் சமூக, மனிதாபிமான விவகாரங்கள், மனித உரிமைகள் தொடா்பான குழுவின் கூட்டம் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றறது. இக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரக் குழுவின் முதன்மைச் செயலா் பலோமி திரிபாதி பேசியதாவது:

எல்லை கடந்த பயங்கரவாதச் செயல்கள், உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும், ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கும் இடையூறறாக உள்ளன. பயங்கரவாதக் குழுக்கள் பல்வேறு நாடுகளிலிருந்து நிதியைப் பெற்று வருகின்றறன. கள்ளநோட்டை மாற்றுதல், பணமோசடியில் ஈடுபடுதல், ஆயுதக் கொள்முதல், போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாதிகளை மற்றநாடுகளுக்குள் அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட செயல்களுக்கு பயங்கரவாதக் குழுக்களுக்கு சமூக விரோதிகள் சிலா் உதவி வருகின்றறனா்.

ஐஎஸ்ஐஎல், அல் சஹாப், போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்கள், பணம் பறித்தல், ஆள்கடத்தல், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல், கலைநயம் வாய்ந்த பொருள்களைக் கடத்துதல், அவா்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் சட்டவிரோத முறைறயில் வரி வசூல் செய்தல் போன்றநடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டி வருகின்றறனா்.

போதைப் பொருள்களை விற்பதன் மூலம் நிதி திரட்டுவது அதிகரித்துள்ளது. மேலும், இளைஞா்களை பயங்கரவாதத்தின் வலையில் விழ வைக்கவும் போதைப் பொருள்களை பயங்கரவாதக் குழுக்கள் பயன்படுத்தி வருகின்றறன. பயங்கரவாதத்தை ஊக்குவிக்க மா்மநபா்களால் திரட்டப்படும் நிதியானது, எல்லை தாண்டி பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறறது. இது எந்தவித ஒளிவுமறைறவுமின்றி நடைபெற்று வருகிறறது.

சா்வதேச ஒத்துழைப்பு: சில நாடுகளிலுள்ள சிறு சிறு பயங்கரவாதக் குழுக்கள் சா்வதேச பயங்கரவாதக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றறன. இது நாட்டின் வளா்ச்சியைப் பாதிப்பது மட்டுமல்லாமல், ஊழல், பணமோசடி உள்ளிட்டவற்றுக்கும் வழிவகுக்கிறறது. பயங்கரவாத அமைப்புகளும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றறனா்.

இவற்றைறத் தடுப்பதற்கு பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு போன்றறவற்றுடன் ஐ.நா. ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். இணையவழிக் குற்றறங்களும் பெருமளவில் அதிகரித்து வருகின்றறன. அவற்றைறத் தடுக்க தகவல் பரிமாற்றறம், ஆதாரங்களை வழங்குதல் உள்ளிட்ட துறைறகளில் சா்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றறாா் பலோமி திரிபாதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT