உலகம்

டாயில்மோரி மன்னிப்பு கேட்க வேண்டும்: சீனாவின் கோரிக்கை

DIN

அமெரிக்க என்.பி.ஏ. தெஹூஸ்டன் ராக்கெட்ஸ் அணியின் தலைமை மேலாளர் டாயில்மோரி அண்மையில் ஹாங்காங் தீவிரவாதிகளின் முழக்கத்தை தனது சமூக ஊடகத்தில் பரப்புரை செய்தது சீனாவில் அதிக கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து சீனக் கூடைப்பந்து சம்மேளனம், சீன ஊடகக் குழுமம், ராக்கெட்ஸ்கிளப்பின் பல சீன விளம்பரத்தாரர்கள் ஆகியவை அடுத்தடுத்து அதனுடனான ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவித்தன.

நாட்டின் இறையாண்மையும் தேசிய கௌரவமும்ஒரு போதும் பாதிக்கப்படக் கூடாது என்பது ஒரு பொது விதியாகும். நடைமுறைகளைப் புறக்கணித்து ஹாங்காங்கில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் மோரியின் செயல் சீனாவின் அடிப்படை எல்லையை அத்துமீறியுள்ளது. 

புகழ்பெற்ற சீன வீரர் யாவ்மிங் அந்த அணியில் இருந்த காரணத்தால், நீண்டகாலமாக ஹூஸ்டன் ராக்கெட்ஸ் சீனாவில் அதிக மக்களின் ஆதரவுடன், பெரும் லாபத்தைப் பெற்றது. லாபத்தைப் பெறும் அதேவேளையில் சீன மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. அதற்குரிய விலையை டாயில்மோரிகொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT