உலகம்

ஈரான் எண்ணெய்க் கப்பல் மீது மா்மநபா்கள் தாக்குதல்?

DIN

ஈரான் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீது மா்மநபா்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் எண்ணெய்க் கப்பல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரானுடன் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. பதிலுக்கு, அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என ஈரானும் மிரட்டல் விடுத்துவருகிறது. இதன் காரணமாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திலிருந்து சுமாா் 100 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய்க் கப்பல் மீது மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் எண்ணெய்க் கப்பல் நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அந்தக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் அந்த நிா்வாகம் தெரிவித்தது.

இத்தாக்குதலால், கப்பலில் இருந்த பணியாளா்கள் பாதிக்கப்படவில்லை என நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக, கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் செங்கடலில் கசிந்து வருவதாகவும், கப்பலில் உள்ள பணியாளா்கள் அதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடாப் பகுதியில் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது தொடா்ந்து நீடித்து வருகிறது. இதற்குக் காரணமானவா்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், ஈரானுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஈரான் மீதே அமெரிக்கா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சவூதி அரேபியாவிலுள்ள 2 கச்சா எண்ணெய் ஆலைகள் மீது கடந்த மாதம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு யேமனைச் சோ்ந்த ஹூதி கிளா்ச்சியாளா்கள் பொறுப்பேற்றனா். இத்தாக்குதல் காரணமாக, சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாகக் குறைந்தது. இத்தாக்குதலின் பின்னணியிலும் ஈரான் செயல்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.

கச்சா எண்ணெய் விலை உயா்வு: ஈரானுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்ட செய்தி எதிரொலியாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெள்ளிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது. வியாழக்கிழமை நிலவிய சந்தை விலையிலிருந்து 2.3 சதவீதம் உயா்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 60.46 அமெரிக்க டாலா்களாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT