முகப்பு
உலகம்

மெக்ஸிகோவில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 14 போலீஸார் சாவு

மெக்ஸிகோவில் அடையாளம் தெரியாத, ஆயுதங்களுடன் கூடிய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 14 போலீஸார் படுகொலை செய்யப்பட்டனர். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:23 AM
பகிர்:

மெக்ஸிகோவில் அடையாளம் தெரியாத, ஆயுதங்களுடன் கூடிய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 14 போலீஸார் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஸ்பூட்னிக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அகுயிலில்லா பகுதியில் ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 14 போலீஸார் கொல்லப்பட்டனர். அவர்களை தேட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புப் பேரவை தெரிவித்துள்ளது.

இதில் அனைத்து தொழில்நுட்ப மற்றும் மனித உதவிகளும் பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் நீதியின் முன் நிச்சயம் நிறுத்தப்படுவார்கள் என்று பதிவிட்டுள்ளது.

போலீஸார் மீதான இந்த வெறிச்செயலுக்கு அப்பகுதி ஆளுநர் கண்டனமும், உயிரிழந்தவர்களுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார். போதை ஒழிப்பு நடவடிக்கையின் போது இச்சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இச்சம்பவத்தின் போது 2 போலீஸ் வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →