உலகம்

பிப்ரவரி 2020 வரை 'கிரே' பட்டியலில் பாகிஸ்தான்: இன்று இறுதி முடிவு?

பயங்கரவாதச் சம்பவங்களுக்குத் துணைபோனதற்காக, பாகிஸ்தானை 'கிரே' பட்டியலில் எஃப்ஏடிஎஃப் அமைப்பு கடந்த ஆண்டு வைத்தது. 

DIN

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளைக் கண்காணித்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தொடங்கப்பட்ட எஃப்ஏடிஎஃப் அமைப்பின் வருடாந்திர கூட்டம், பாரீஸ் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எஃப்ஏடிஎஃப் அமைப்பின் நிர்வாகிகள் கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகின்றனர்.

பயங்கரவாதச் சம்பவங்களுக்குத் துணைபோனதற்காக, பாகிஸ்தானை 'கிரே' பட்டியலில் எஃப்ஏடிஎஃப் அமைப்பு கடந்த ஆண்டு வைத்தது. அத்துடன் 27 அம்ச செயல் திட்டங்களை அக்டோபர் 2019-க்குள் நிறைவேற்றாவிட்டால், ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளைப் போன்று பாகிஸ்தானும் கறுப்பு பட்டியலில் வைக்கப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதில் பாகிஸ்தான் 6 அம்ச செயல் திட்டங்களை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாகிஸ்தானை கடுமையாக எச்சரிக்கும் விதமாக பிப்ரவரி 2020 வரை 'கிரே' பட்டியலில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவே அந்நாட்டுக்கு அளிக்கப்படும் கடைசி கட்ட எச்சரிக்கையாகும்.

இதுகுறித்து இறுதி முடிவு இன்று எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு நீடித்தால் பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய சர்வதேச நிதியமைப்புகளிடம் இருந்து பாகிஸ்தான் நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, எஃப்ஏடிஎஃப் அமைப்பின் தற்போதைய தலைவராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: நிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ் வாக்களிப்பு!

நெல்லை அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

அட்டகாசமான வரவேற்பு... டீயஸ் ஈரே வசூல் இவ்வளவா?

வயதான தாயை தூக்கிவந்து வாக்களிக்க வைத்த மகன்! | Bihar | Election

என்னை இந்தியராக சித்தரித்து மோசடி! ஹரியாணா வாக்காளராக இடம்பெற்ற பிரேசில் மாடல்!

SCROLL FOR NEXT