உலகம்

பாதாளச் சாக்கடையிலிருந்து மீட்கப்பட்ட 13 அடி நீள பாம்பு!

பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 13 அடி நீள ராஜநாகம் ஒன்று பாதாளச்சாக்கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

சி.பி.சரவணன்

பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 13 அடி நீள ராஜநாகம் ஒன்று பாதாளச்
சாக்கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்து நாட்டில், பாங்காக் நகரில், ஹவுசிங் எஸ்டேட் பாதாளச் சாக்கடையில் 13 அடி நீளமுள்ள ராஜ நாகம் ஒன்று இருந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த காவலாளி ஒருவர், மீட்புக் குழுவிற்கு தகவல் தந்துள்ளார்.

இதனையடுத்து 7 பேர் கொண்ட மீட்புக் குழுவினர், 13 அடி பாம்பை மீட்பதற்காக பாதாளச் சாக்கடையில் இறங்கினர். அதில் ஒருவர் பாதாள குழாய்க்குள் இருந்து தென்பட்ட பாம்பின் வாலை, பிடித்து இழுக்க முயன்றார். ஆனால் அது நழுவி நழுவிச் சென்றது.

இதனைத் தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த பாம்பு அவரின் கையில் சிக்கியது. கிட்டதட்ட இந்த ராஜநாகம் 15 கிலோ எடை என கூறப்படுகிறது. பிடிப்பட்ட ராஜ நாகத்தை மீட்பு குழுவினார் அடர்ந்த காட்டுக்குள் விட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT