உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு மாரடைப்பு

DIN

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட்டதால், நவாஸ் ஷெரீஃப் திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து பனாமா ஆவண முறைகேடு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபுக்கு (69) கடுமையான உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், லாஹூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீஃபுக்கு சனிக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இத்தகவலை பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஹமித் மிர் என்பவர் வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT