முகப்பு
உலகம்

சமையலறையில் கிடைத்த 800 ஆண்டு பழைய இயேசு கிறிஸ்து ஓவியம்; 2200 கோடி ரூபாய்க்கு ஏலம்

பிரான்சில் ஃபிளோமின் வொல்ஃப் (Philomène Wolf)  என்ற பெண் வீட்டை விற்க முடிவு செய்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடை காலி செய்துள்ளார்.

Updated On : 28 அக்டோபர், 2019 at 3:05 PM
இயேசு கிறிஸ்து ஓவியம்
பகிர்:

பிரான்சில் ஃபிளோமின் வொல்ஃப் (Philomène Wolf)  என்ற பெண் வீட்டை விற்க முடிவு செய்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடை காலி செய்துள்ளார். அப்போது வீட்டு சமையலறையில் கிடைத்த ஓவியம், பழமையானது என அறிந்து நிபுணர்களிடம் கூறியுள்ளார். அந்த ஓவியம் 24 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,200 கோடி) ஏலத்தில் போனது ஒரு புதிய சாதனையை ஏற்பத்தியுள்ளது.

ஃபிளோமின் வொல்ஃப்

நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த இந்த ஓவியம், இயேசு கிறிஸ்துவை கேலி செய்வது போன்ற ஓவியம். 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல  ஓவியரான சென்னி டி பெப்போ (Cenni di Pepo) என்னும் சிமாபு (Cimabue) வரைந்த ஓவியமாகும்.

பாரிஸில் டர்க்வின் என்ற நிபுணர்கள் அகச்சிவப்புக் கதிர்மானியை ( infrared reflectography) வைத்து இது 1280 ஆம் வருடத்தைச் சேர்ந்தது என உறுதி செய்தனர். எனவே இந்த ஓவியம் சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.

Advertisement

இந்த ஓவியத்துக்கு ஆறு மில்லியன் பவுண்டுகள் ஏலத்தில் கிடைக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி இந்த ஓவியத்துக்கு நான்கு மடங்கு அதிகமாக ஏலத்தில் கிடைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

பிரான்சின் கோம்பின் நகரில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் தட்டுகளை சூடாக வைக்கும் இயந்திரத்துக்கு மேலாக இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக யாரின் கவனிப்பும் இன்றி தொங்கி கொண்டிருந்தது.

அந்த பகுதியில் பழைய பொருட்களை ஏலத்தில் விடுபவர் ஒருவர் இதை கவனித்து, வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் மேற்கூறிய ஓவியத்தை நிபுணர்களால் ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டார்.

இது மத அடையாளங்கள் கொண்ட ஒரு பழைய ஓவியமென்றும், இதற்கு பெரிய மதிப்பில்லை என்றும் வீட்டின் உரிமையாளர் கருதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.