முகப்பு
உலகம்

இந்த ரோபோவுக்கு முகம் தந்தால் ரூ.90 லட்சம் பரிசாம்! ஏதாவது பிரச்னை ஆகுமோ?

தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று தயாரிக்கும், 'ரோபோ' எனப்படும், இயந்திர மனிதனுக்கு, உங்கள் முகத்தை போலவே தோற்றத்தை தர அனுமதி அளித்தால், 90 லட்சம் ரூபாய் பரிசு தர, அந்நிறுவனம் முன்வந்துள்ளது.

Updated On : 28 அக்டோபர், 2019 at 12:08 PM
want face for robo
பகிர்:

தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று தயாரிக்கும், 'ரோபோ' எனப்படும், இயந்திர மனிதனுக்கு, உங்கள் முகத்தை போலவே தோற்றத்தை தர அனுமதி அளித்தால், 90 லட்சம் ரூபாய் பரிசு தர, அந்நிறுவனம் முன்வந்துள்ளது.

பெயர் குறிப்பிடாத ஒரு தொழில்நுட்ப நிறுவனம், முதியவர்களுக்கு உதவி செய்யும் வகையிலான, 'ரோபோ' எனப்படும், இயந்திர மனிதர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ரோபோவுக்கு, மிகவும் அன்பான, நட்புடன் கூடிய முக அமைப்பு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட முக அமைப்பு கொண்டவர்கள், தங்கள் முகத்தைப் போலவே, ரோபோவின் முகத்தை வடிவமைக்க அனுமதி அளித்தால், அவர்களுக்கு 90 லட்சம் ரூபாய் பரிசு தர, அந்நிறுவனம் முன்வந்துள்ளது.

இவ்வாறு அனுமதி அளித்தால், ஒரே முக அமைப்பு கொண்ட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோபோக்களை, அந்நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆட்களை தேடும் பணியில், அந்த நிறுவனம் முழு வீச்சில் இறங்கி உள்ளது. இந்த தகவல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

ஆனால், இந்த ரோபோக்களை தயாரிக்க உள்ள நிறுவனம் பற்றிய விளம்பரம் இல்லாததால், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதே போல, முகம் தானம் அளித்தால், எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படாதா என்ற கருத்து மோதல்களும் எழுந்துள்ளன.

ரோலண்ட் மந்த்ரோப் (Rowland Manthrope) என்ற ஒரு தொழில்நுட்ப நிருபர் இதுபற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.