கடத்தப்பட்ட ஹிந்து பெண்ரெனோ குமாரி 
உலகம்

கடத்தல்..கட்டாய மதமாற்றம்: வீடு திரும்பினார் பாகிஸ்தானிய ஹிந்துப் பெண் 

கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட பாகிஸ்தானிய ஹிந்துப் பெண் ரெனோ குமாரி  வீடு திரும்பினார்.

DIN

இஸ்லாமாபாத்: கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட பாகிஸ்தானிய ஹிந்துப் பெண் ரெனோ குமாரி  வீடு திரும்பினார்.

பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்து பெண் ஒருவர் இஸ்லாமிய நபரால் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கடந்த வாரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் அந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்யப்பட்டது கூடுதலாக புயலைக் கிளப்பியது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பத்திரிக்கைகளில் வெளியான தகவல்களின்படி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும் ரெனோ குமாரி என்ற பெண் ஆகஸ்ட் 29-ஆம் தேதி சிந்து மாகாணத்தில் ரோகரி நகரில் இருந்து தான் படிக்கும் கல்லூரிக்குச் செல்லும்போது கடத்தப்பட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் அந்த பெண்ணின் பெற்றோர், தங்கள் மகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றதிற்கு உள்ளாகி,திருமணம் செய்து வைக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சிந்து மாகாண ஹிந்து மத அமைப்பினர் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசை வலியுறுத்தினர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கடத்தப்பட்ட பெண்ணை உடனடியாக அவரது வீட்டிற்கு அனுப்ப பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அந்தப் பெண் புதனன்று அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT