உலகம்

மேலும் ஓர் ஏவுகணை லாஞ்சரை சோதித்தது வட கொரியா

DIN


வட கொரியா மீண்டும் ஓர் ஏவுகணை ஏவு சாதனத்தை (லாஞ்சர்) சோதித்துத் பார்த்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் புதன்கிழமை கூறியதாவது:
பல ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவக் கூடிய திறன் வாய்ந்த, மிகப் பிரம்மாண்டமான ஏவுகணை லாஞ்சர், செவ்வாய்க்கிழமை சோதித்துப் பார்க்கப்பட்டது.
அந்த சோதனையை, அதிபர் கிம் ஜோங்-உன் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
போரின்போது ஏவுகணைகளைத் தயார்ப்படுத்துவதற்குத் தேவையான கால அளவைத் தெரிந்துகொள்வதற்காக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஏவுகணை லாஞ்சரின் சக்தியை சோதிக்க வேண்டியது இன்னும் பாக்கியுள்ளது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அடையாளம் தெரியாத 2 ஏவுகணைகளை வட கொரியா செவ்வாய்க்கிழமை ஏவியதாகவும், அவை 330 கி.மீ. பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்தது. இந்த நிலையில், தனது ஏவுகணை லாஞ்சரை சோதிப்பதற்காக அந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தற்போது வட கொரியா தெரிவித்துள்ளது.
தனது அணு ஆயுதங்களை வட கொரியா கைவிடுவது தொடர்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கருத்து வேறுபாடுகளால் தற்போது தடைபட்டுள்ளது. இந்த நிலையில், வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளையும், லாஞ்சர் சோதனைகளையும் மேற்கொண்டுவருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

SCROLL FOR NEXT