முகப்பு
உலகம்

இலங்கை: நாடாளுமன்றத் தலைவர் அதிபர் தேர்தலில் போட்டி

இலங்கையில் வரும் நவம்பர் 7 முதல் டிசம்பர் 7-ஆம் தேதிக்குள் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட, நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யா முடிவு செய்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:07 AM
பகிர்:


இலங்கையில் வரும் நவம்பர் 7 முதல் டிசம்பர் 7-ஆம் தேதிக்குள் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட, நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யா முடிவு செய்துள்ளார். ஏற்கெனவே ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அந்தத் தேர்தலில் போட்டியிட பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசாவும் முடிவு செய்துள்ள நிலையில், ஜெயசூர்யாவும் போட்டியில் இறங்கிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூவரில் ஒருவர், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சவை அதிபர் தேர்தலில் எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments