உலகம்

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

DIN


இந்தோனேஷியாவின் கிழக்கே அமைந்துள்ள ஜாவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இந்தோனேஷியாவின் ஜாவா மாகாணத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 2.06 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், டுபான் நகருக்கு 56 கி.மீ. தொலைவில், கடலுக்குள் 656 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, 6.0 ரிக்டர் அளவு கொண்ட மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, முந்தைய நிலநடுக்கத்தின் பின்னதிர்வாகக் கருதப்படுகிறது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேஷியா அமைந்திருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT