உலகம்

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எட்ட இன்னும் வாய்ப்புள்ளது

DIN

தங்களது அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகியதற்குப் பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே தொடர வேண்டிய சிறப்பு உறவு தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இன்னும் வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜீன்-கிளாட் ஜங்க்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட்டனில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின்போது பொய் செய்திகள் பரப்பப்பட்டதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியன் இன்னும் அதிகமாக மேற்கொண்டிருக்கலாம். பிரெக்ஸிட்டுக்கான அக். 31-ஆம் தேதி கெடு நெருங்கி வரும் சூழலிலும், ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் அதுதொடர்பான ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT