உலகம்

இந்தியாவில் 2025-க்குள் காசநோய் ஒழிக்கப்படும்: பிரதமர் மோடி

DIN

இந்தியாவில் 2025-க்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை தெரிவித்தார். 

அமெரிக்காவின் நியூயார்க்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பருவநிலை நடவடிக்கை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து உலகளாவிய சுகாதார அமைப்பு நடத்திய கூட்டமைப்பில் பங்கேற்றார். அதில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவில் யோகா, ஆயுர்வேதம் மற்றும் உடற்திறனுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுதும் 1.25 லட்சம் சுகாதார நிலையங்களை உருவாக்கி வருகிறோம். இதன்மூலம் நீரிழிவு, மனஅழுத்தம் போன்ற நோய்கள் குண்ப்படுத்தப்பட்டு வருகின்றன.

இ-சிகரெட் தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. எனவே நாட்டில் உள்ள இளைஞர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா போன்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள 5 கோடி ஏழைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் வரை செலவிடப்படுகிறது. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 45 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 

இந்தியாவில் 2025-க்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT