உலகம்

பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு

ஐ.நா. தலைமையகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ கலந்து கொண்டார்.

DIN

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 26-ஆம் நாள் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில் கலந்து கொண்டார்.
 
ஐந்து நாட்டுத் தலைவர்களின் நெடுநோக்குத் வழிகாட்டலில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பின் செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்து வருகின்றது என்று வாங் யீ தெரிவித்தார்.

அரசியல் வழிமுறையின் மூலம், முக்கியமான பிரச்னைகளைத் தீர்ப்பதில் கூட்டாகப் பங்காற்ற வேண்டும் என்று ஐந்து நாடுகளுக்கு வாங் யீ வேண்டுகோள் விடுத்தார்.

பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பைப் பன்முகங்களிலும் உயர்த்த வேண்டும். குறிப்பாக, பொருளாதார மற்றும் வர்த்தகம், அரசியல் பாதுகாப்பு, மானிடவியல் பரிமாற்றம் ஆகியவற்றிலான ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கு பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது நிலவும் சர்வதேச நிலைமையில், நெடுநோக்குத் தொடர்பைப் பிரிக்ஸ் நாடுகள் மேலும் வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

SCROLL FOR NEXT