முகப்பு
உலகம்

ஐ.நாவில் மோடி எடுத்துச் சொன்ன தமிழ்ப்பாடல் எது தெரியுமா? 

வெள்ளியன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, சங்கத் தமிழ் பாடல் ஒன்றை எடுத்துக்காட்டிப் பேசினார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:13 AM
ஐ.நா பொதுச்சபையில் மோடி
பகிர்:

நியூயார்க்: வெள்ளியன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, சங்கத் தமிழ் பாடல் ஒன்றை எடுத்துக்காட்டிப் பேசினார்.

ஐ.நா. பொதுச் சபையில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளியன்று நடைபெற்ற பொது அவையின் கூட்டத்தில்  பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர், 'உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ இந்தியா விரும்புகிறது' என்று கூறி, தனது உரையில் இந்தியாவின் சாதனைகளை பட்டியவிட்டு பேசினார்.

தனது பேச்சினூடே அவர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற சங்கத்தமிழ் புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி பேசினார்.

அதன் அர்த்தத்தை எடுத்துக் கூறி அவர் தமிழ் மொழி பற்றியும், கவியின் பரந்த நோக்கம் பற்றியும் வியந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.