உலகம்

உலகளவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 59 ஆயிரத்தைத் தாண்டியது

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 59 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சீனாவில் பாதிக்கத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று, மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கி தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் தனிமைப்படுத்துவதும், பரிசோதனை மேற்கொள்வதுமே உரிய மருந்து என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பலியானோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதுவரை உலகளவில் 1,099,711 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,77,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இதுவரை 59,975 பேர் பலியாகியுள்ளனர். இதில், அதிகபட்சமாக இத்தாலியில் 14,681 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 3,082 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 229 ஆகவும் உள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 86 ஆகவும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT