உலகம்

கரோனா: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மருத்துவமனையில் அனுமதி

DIN

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சீனாவில் உருவான கரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அந்த வைரஸால் ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பிரிட்டனிலும் கரோனா வைரஸ் வேகமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வைரஸால் இங்கு சுமார் 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 

உலகத் தலைவா்களில் முதல் முறையாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், காணொலி மூலம் அரசு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அவருக்கு நோயின் அறிகுறி தென்பட்டதால் போரிஸ் ஜான்ஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்தவரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT