உலகம்

ஸ்பெயின் பலி எண்ணிக்கை: தொடர்ந்து 4-வது நாளாக குறைவு

DIN


ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஒருநாளைக்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 4-வது நாளாக குறைந்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின் முன்னணியில் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 4 நாள்களாக அங்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 637 பேர் பலியாகியுள்ளனர். ஏறத்தாழ 2 வாரங்களில் 24 மணி நேரத்தில் பலியாவோரின் எண்ணிக்கையில் இதுவே குறைந்த எண்ணிக்கை. 

மார்ச் 21-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் அங்கு பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவரங்கள், இது குறைந்து வருவதையே காட்டுகிறது.

ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோர்: 1,35,032

பலியானோர்: 13,055

குணமடைந்தோர்: 40,437

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT