அமெரிக்காவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1200 பலியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணம் வூஹானில் பரவத்தொடங்கிய கரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு உலகம் முழுவதும் 216க்கும் மேற்பட்ட நாடுகளில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது.
இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சுமார் 336,673 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 1200 பலியாகி உள்ளனர்.
இத்துடன் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 9,618ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கவில் குறிப்பாக நியூயார்க் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டரை நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருவதால் சுகாதாரத்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.