முகப்பு
உலகம்

அமெரிக்கா: அதிகளவில் கரோனா பாதிப்பையும் உயிரிழப்பையும் சந்திக்கும் இந்திய வம்சாவளி

அமெரிக்காவின் நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்ஸி மாகாணங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் ஏராளமானோர் கரோனா பாதித்திருப்பதாகவும்,

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:


வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்ஸி மாகாணங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் ஏராளமானோர் கரோனா பாதித்திருப்பதாகவும், அதில் பலரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் எத்தனை பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவர்களில் எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அல்லது அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. 

எனினும், சமூக வலைத்தள குழுக்கள் மூலம், நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்ஸி மாகாணங்களில் மரணம் அடைந்தவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களை அதிகம் கொண்ட இந்த இரண்டு மாகாணங்களும்தான், கரோனா தொற்று காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி இந்த இரண்டு மாகாணங்களில் மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், சுமார் 5,700 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கான அமைப்பின் தலைவர்கள் பலரும், ஒவ்வொரு நாளும், நாங்கள் வாழும் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

எங்கள் சமுதாய மக்களுக்கு இப்படி நடப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது. எங்களுக்கு நன்கு தெரிந்த மக்களுக்கு இப்படி நடப்பதை நம்பவே முடியவில்லை என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ராஜேந்திர டிச்பல்லே கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.