உலகம்

ரஷியாவில் முதல்முறையாக ஒரு நாளில் அதிக பாதிப்பு: 1,154 பேருக்கு கரோனா உறுதி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,497 ஆக அதிகரித்துள்ளது.

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,497 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ரஷியாவில் ஒரே நாளில் அதிக பாதிப்பு எண்ணிக்கை இதுவே ஆகும். இதுவரை கரோனாவால் அங்கு 58 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ரஷியாவில் பெரும்பாலாக மாஸ்கோவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உள்ளன. கடந்த மார்ச் 30 முதல், மாஸ்கோவில் உள்ள மக்கள் அனைவரும்  தங்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 7497

உயிரிழந்தோர் எண்ணிக்கை: 58 

குணமடைந்தோர் எண்ணிக்கை: 494 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT