உலகம்

சீனாவிடம் இழப்பீட்டைக்கோரும் மேலை நாட்டவர் சிலரின் செயலுக்கு ஆதாரமில்லை

DIN

லண்டனில் அமைந்துள்ள பிரிட்டனின் சிந்தனை கிடங்கு ஒன்று அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் புதிய ரக கரோனா வைரஸ் பரவலுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று தாக்கல் செய்ததோடு, சீனாவிடம் இழப்பீட்டை கோரும் வகையில் சர்வதேச சமூகம் தொடர்புடைய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.

இது மிகவும் அபத்தமானது. பெரும் தியாகம் மற்றும் முயற்சிகளுடன் சீனா உலகளாவிய நோய் தொற்று தடுப்புக்கு முதலாவது பாதுகாப்பு திரையை உருவாக்கியுள்ளது. சீனாவின் தகவல் அறிவிப்பு, அனுபவங்களின் பகிர்வு போன்ற செயல்கள் உண்மையில் சர்வதேச சமூகத்தில் பாராட்டைப் பெற்றுள்ளன. பொறுப்புடன் செயல்பட்ட சீனாவிடம் இழப்பீட்டைக் கோருவது என்ற கருத்தில் நியாயமும் ஒழக்கநெறியும் ஒன்றுமில்லை.

நோய் தொற்றினால் மனித இனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம். வரலாற்றில் பொது சுகாதார சம்பத்தின் காரணமாக குறிப்பிட்ட நாடு அல்லது இனத்துக்கு இழப்பீட்டை கோரியதாக உதாரணங்கள் இல்லை. மேலை நாட்டவர் சிலரின் இத்தகைய கருத்து குறித்து இணைய பனயாளர் ஒருவர் கூறுகையில் இது நகைப்புக்குரியது. காய்ச்சல் ஏற்படும் போது யாரிடம் கட்டணம் கட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

பிரிட்டனின் வலது சாரி அரசியல்வாதிகள் இத்தகைய கருத்துக்கு ஆதரவளிப்பதற்கான காரணம், வைரஸ் பரவலுக்கு எதிராக அரசு மேற்கொண்ட ஒழுங்கற்ற நடவடிக்கைக்கு பலிகடாவைத் தேடுவதாகும் என்பது கவனிக்கத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT