உலகம்

ஒரே நேரத்தில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு

DIN

ஊரடங்கு உள்ளிட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஒரே நேரத்தில் தளர்த்த வேண்டாம், படிப்படியாக தளர்த்துவது குறித்து சிந்திக்குமாறு உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் பேரிடர் காலப் பிரிவு தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கரோனாவைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்திருக்கும் நிலையில், படிப்படியாகக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கையை பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர் மைக் ரையான் இது பற்றி கூறுகையில், பல்வேறு நாடுகள் பள்ளி, தொழில், பொது விழாக்கள், பொதுவிடங்களில் மக்கள் கூடுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எனவே, ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கான அவகாசம் முடிந்ததும், ஒரே நேரத்தில் தளர்த்துவது என்பது ஒரு தவறான யோசனையாக இருக்கும். கரோனாவைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, கட்டுக்குள் வந்த பிறகே, கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கையை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஊரடங்கு உள்ளிட்டக் கட்டுப்பாடுகள் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தி வருகிறது. ஒரு வேளை கட்டுப்பாடுகளை தளர்த்திவிட்டால், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய வேண்டியது மிகவும் அவசியம். எனவே, கரோனா பாதித்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பெரிய அளவில் சோதனைகளை நடத்தி, சிகிச்சை அளிக்க வேண்டியது தற்போது மிக முக்கியப் பணியாகும் என்றும் ரையான் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT