உலகம்

உலக அளவில் கரோனா பாதிப்பு 13 லட்சத்தை எட்டியது

DIN

உலக அளவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்தோர் எண்ணக்கை 13 லட்சத்து 47 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 700 ஆக உள்ளது.

கரோனா பாதிப்பினால் உலக நாடுகள் சொல்லொணாத் துயரை அனுபவித்து வரும் நிலையில், மகிழ்ச்சி தரும் வகையில் இதுவரை 2 லட்சத்து 86 ஆயிரம் பேர் கரோனா பாதித்து சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர்.

தற்போது உலக நாடுகளில் சுமார் 9 லட்சத்து 86 ஆயிரம் கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அமெரிக்காவில் 3 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 900 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஸ்பெயினில் 1 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 16 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனா பாதிப்பு நான்கு ஆயிரத்தைத்தாண்டிவிட்டது. பலி எண்ணிகையும் நூற்றுப் பத்தை எட்டிவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT