இத்தாலியில் கரோனா பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது
கரோனா நோய்த்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காவுக்கு
கரோனா நோய்த்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இத்தாலியும் ஒன்றாகும். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 253 ஆக உயர்ந்துள்ளது. 210 நாடுகளில் மொத்தம் 18 லட்சத்து 53 ஆயிரத்து 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 23 ஆயிரத்து 692-க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கரோனா நோய்த்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை 1 லட்சத்து 56 ஆயிரத்து 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 19 ஆயிரத்து 899 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை 34 ஆயிரத்து 211 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.