உலகம்

ஜெர்மனியில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,000 ஐத் தாண்டியது!

ஜெர்மனியில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  4,000 ஐத் தாண்டியுள்ளதாகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,000 ஐ எட்டியுள்ளது என்றும் அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

DIN

ஜெர்மனியில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  4,000 ஐத் தாண்டியுள்ளதாகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,000 ஐ எட்டியுள்ளது என்றும் அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 289 இறப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,093 ஆக உள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 3,382 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,38,135 ஆக உயர்ந்தது. மேலும், அந்நாட்டில் 82,000 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸைத் தொடர்ந்து கரோனா நோய்த் தொற்றுகளில் ஐந்தாவது மிக உயர்ந்த எண்ணிக்கையை ஜெர்மனி கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT