உலகம்

ஈரானில் பலி 4,958 ஆக அதிகரிப்பு; இன்று மட்டும் 89 பேர் உயிரிழப்பு!

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 89 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 89 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, ஈரானில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,958 யை எட்டியுள்ளது. ஈரானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,494 ஆக உள்ளதாகவும், இதில் 3,563 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 52,229 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

இத்தகவலை அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் தெரிவித்தார். 

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு நாடு ஈரான் ஆகும். உலகின் அதிகமான இறப்பு எண்ணிக்கையில் ஈரானும் ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT