ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 430 பேர் பலி
ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 430 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு..
மாட்ரிட்: ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 430 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. இதுவரை அந்த நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகிலேயே பலி எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் இத்தாலிக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தை ஸ்பெயின் பிடித்துள்ளது.
இதுவரை அந்த நாட்டில் 2,04,178 கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21,282 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 82,514 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.