கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு உலக அளவில் இதுவரை 28,30,082-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,97,246-க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 58,550-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,98,776-ஆக அதிகரித்திருப்பது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.