ரஷியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது
ரஷியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ரஷியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை 32 லட்சத்து 32 ஆயிரத்து 975 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 59,766 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 517 -ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடிய நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 10 லட்சத்து 08 ஆயிரத்து 496 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலக அளவில் கரோனா நொய்த்தொற்றுக்கு அதிகயளவில் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 10 லட்சத்து 64 ஆயிரத்து 572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரஷியாவிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7,099 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து 1,06,498ஆக உயர்ந்துள்ளது.
அதில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 2,829 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அங்கு கரோனாவுக்கு இதுவரை 1,073பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பாதிப்பில் இருந்து 1,333 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 11,619ஆக உயர்ந்துள்ளது.