உலகம்

உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பெய்தொவ்வின் சேவை

DIN

பெய்தொவ் செயற்கைக்கோள்கள் அமைப்பு, உலகிலுள்ள 120க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குச் சேவை புரிந்து வருவதாக பெய்தொவ் செயற்கைக் கோள் புவியிடங்காட்டி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ழான் ச்செங்ச்சீ, சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஆகஸ்டு 3 ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆசியான் நாடுகள், தென் ஆப்பிரிக்கா,  கிழக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா முதலான இடங்களில் நில அளவீடு, வேளாண்மை, டிஜிட்டல் கட்டுமானம், பொலிவுறு துறைமுகம் முதலிய துறைகளில் பெய்தொவ் அமைப்பு வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

160க்கும் மேற்பட்ட முக்கிய தொழில் நுட்பங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட உதிரிப்பாகங்களுடன் கூடிய பெய்தொவ் - 3 செயற்கைக் கோளின் 100 விழுக்காட்டு முக்கிய பகுதிகள் சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT