முகப்பு
உலகம்

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 6.92 லட்சத்தைத் தாண்டியது

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.82 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6.92  லட்சத்தையும் கடந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
Worldwide, the number of corona deaths exceeds 6.92 million
பகிர்:

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.82 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6.92 லட்சத்தையும் கடந்துள்ளது. 

உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பும், கரோனா பலியும் கட்டுப்படுத்த முடியாத வகையில் உயர்ந்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை முடக்கிப்போட்டுள்ளது.உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

ஆகஸ்ட் 3-ம் தேதி நிலவரப்படி உலக அளவில் 1,82,36,624 பேர் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 6,92,822 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 1144,6,955 போ் குணமடைந்துள்ளனர். மேலும், 60,94,847 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 65,754 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.