சீன தொழிற்சாலையில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்திலி பலியானோர் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:33 PM
மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.
சியான்டாவோ நகரில் ஒரு கரிம சிலிக்கான் நிறுவனத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து காரணமாக, அந்த நிறுவனம் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அந்தப் பகுதியில் விசாரணை நடந்து வருகிறது.
Advertisement