உலகம்

கரோனா இறப்பில் லத்தீன் அமெரிக்க நாடுகள் முதலிடம் 

DIN

லத்தீன் அமெரிக்க நாடு உலகிலேயே அதிகப்படியான கரோனா இறப்புகளைப் பதிவு செய்துள்ளது அந்நாட்டு மக்களிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்புகள் மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் அதிகளவு உள்ளன.

கரோனாவால் ஏற்பட்ட உலக அளவிலான மொத்த இறப்பில் 30 சதவிகித இறப்புகளை லத்தீன் அமெரிக்கப் பகுதிகள் பதிவு செய்துள்ளன. கிட்டத்தட்ட 2 லட்சத்து 6 ஆயிரம் இறப்புகள் இந்தப் பகுதிகளில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரேசில் அதிகளவு பாதிப்புகளை சந்தித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் 95 ஆயிரத்து 819 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். பிரேசிலுக்கு அடுத்தபடியாக மெக்சிகோவில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 869 ஆக உள்ளது.

கரோனா பாதிப்பு பெரு,அர்ஜெண்டினா,கொலம்பியா மற்றும் பொலிவியா போன்ற நாடுகளையும் விட்டுவைக்கவில்லை.கடந்தவாரம் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக லத்தீன் அமெரிக்கப் பகுதிகள் அறியப்பட்டன. இந்நிலையில் தற்போது இறப்புவிகிதமும் அதிகரித்துள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT