உலகம்

மணப்பெண்ணை விடியோ எடுத்த போது பதிவான பெய்ரூட் வெடிவிபத்து

DIN


லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் நேரிட்ட மிகப் பயங்கர வெடிவிபத்து அந்த நாட்டையே உலுக்கிப் போட்டுள்ளது. நூறுக்கும் மேற்பட்டோர் பலியாகினர், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மிகச் சரியாக இந்த வெடி விபத்து நிகழ்ந்த போது, அப்பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணப்பெண்ணை உள்ளூர் புகைப்படக்காரர் மிக அழகாகப் படம்பிடித்துக் கொண்டிருந்தார். சரியாக அந்த விடியோவை பதிவு செய்யும்போதுதான் பெய்ரூட்டில் வெடிவிபத்து நேரிட்டது. அந்த அதிர்வும் விடியோவில் பதிவாகியுள்ளது. அந்த விடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

நல்லவேளையாக மணப்பெண்ணும், மணமகனும் காயங்கள் இன்றி உயிர் தப்பியதாகவும் டிவிட்டரில் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த மிக மோசமான வெடிவிபத்தில் பல கட்டடங்கள் உருகுலைந்ததால், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

பெய்ரூட்டின் இரண்டாவது மிகப்பெரிய தானியக் கிடங்கு இந்த விபத்தில் முற்றிலும் நாசமானது. இதன் காரணமாக, 15,000 டன் தானியங்கள் எரிந்து நாசமாகி, நகர மக்களுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் மட்டுமே உணவு தானியங்கள் எஞ்சியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெடி விபத்து காரணமாக, பெய்ரூட் நகரிலுள்ள சில மருத்துவமனைகள் முற்றிலும் தகர்ந்தன; மேலும் இரு மருத்துவமனைகள் பலத்த சேதமடைந்தன. இதனால், விபத்தில் காயமடைந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு அந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை  ஏற்பட்டது. இதுதவிர, நகரிலுள்ள பெரும்பாலான உணவகங்கள் வெடிவிபத்தில் சேதமடைந்தன.

பெய்ரூட்டிலுள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் இந்த வெடிவிபத்திலிருந்து தப்பவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT