உலகம்

சீன - அமெரிக்க உறவு சீர்குலைவு மனிதகுல நலன்களைப் பாதிக்கும்

DIN

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ உள்ளிட்ட சில அமெரிக்க அரசியல்வாதிகள் சீன எதிர்ப்பு கருத்துக்களை வெளியிடுவது, சீனா மற்றும் சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றின் வழி அமெரிக்க மேற்கொண்டு வரும் புதிய பனிப் போர் நடவடிக்கைகள் உலக பாதுகாப்பைச் சீர்குலைப்பதோடு, மனித குலப் பொது நலன்களையும் பாதிக்கும். எனவே,  சீனாவுடன் இணைந்து, கூட்டு வளர்ச்சியை பெற வேண்டும் என்று பல நாட்டு பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவிந் முதன்மை தூதாண்மை அதிகாரியான பாம்பியோவுக்கு தூதாண்மை திறமை இல்லை. மேலும், அவர் வரலாற்றை திரித்துப்புரட்டி, தற்போதைய உலகில் செல்வாக்குத் மிக்க இரு தரப்புறவை உரிய முறையில் கையாள முடியவில்லை என்று அமெரிக்க தூதாண்மை சங்கத்தின் தலைவர் ரிச்சர்ட் நாதன் ஹாஸ் கூறியுள்ளார். 

அமெரிக்காவின் அடுத்த அரசுத் தலைவர் முதலில் சீனாவுடனான உறவை நிதானப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையிலேயே, ஆசியா நீண்டகால வளர்ச்சி பெற முடியும் என்று சிங்கப்பூர் தலைமையமைச்சர் லீ சியன் லொங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதனிடையில், சீன-அமெரிக்க உறவில் காணப்படும் பின்னடைவு உலக அமைதிக்கு  அச்சுறுத்தலாக அமையும்  என்று பிரிட்டனின் மத்திய லங்காஷையர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பிரச்சினைக்கான நிபுணர் ஜென்னி கிரெய்க் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT