உலகளவில் 2 கோடியைத் தாண்டிய கரோனா பாதிப்பு
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது.
சீனாவின் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. அந்த வைரஸால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டிதுள்ளது. இதன்படி 2,00,24,263 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 733,995 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். தற்போது 63 லட்சத்து 91 ஆயிரத்து 516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 64 ஆயிரத்து 819 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தை நெருங்குகிறது.
ஒரே நாளில் 525 பேர் பலியானதைத் தொடர்ந்து, அங்கு கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.65 லட்சத்தைக் கடந்துள்ளது.