உலகம்

ரஷியாவில் 9 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

UNI

ரஷியாவில் மேலும் 5,102 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 129 பேர் பலியாகியுள்ளனர். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாட்டில் புதிதாக 5,102 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 9,00,000 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 15,260 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை 7,10,298 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரேநாளில் 7,123 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி, 2,30,000 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 3 கோடிக்கு அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 689 பேர் உள்பட இதுவரை 6,94,168 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT