கலிபோர்னியாவில் பதிவான புவியின் அதிகபட்ச வெப்பநிலை
கலிபோர்னியாவின் டெத் வேலி தேசிய பூங்காவில் பூமியின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உலகம்கலிபோர்னியாவில் பதிவான புவியின் அதிகபட்ச வெப்பநிலை
கலிபோர்னியாவின் டெத் வேலி தேசிய பூங்காவில் பூமியின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவின் டெத் வேலி தேசிய பூங்காவில் பூமியின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் புவிவெப்பநிலை உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் கலிபோர்னியாவின் டெத்வேலி தேசிய பூங்காவில் புவியின் அதிகபட்ச வெப்பநிலையாக 54.4 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இது அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் ஏற்பட்ட வெப்ப அலைக்கு மத்தியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் வெப்பநிலை மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், பூமியில் நம்பத்தகுந்த அதிகபட்ச வெப்பநிலையான 54 செல்சியஸ் டெத் பள்ளத்தாக்கிலுள்ள ஃபர்னஸ் க்ரீக்கில் பதிவு செய்யப்பட்டது.
புவியின் அதிகபட்ச வெப்பநிலையாக 55 செல்சியஸ் துனிசியாவில் 1931 இல் பதிவு செய்யப்பட்ட போதிலும் அதில் நம்பகத்தன்மை சிக்கல்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.