முகப்பு
உலகம்

பிரேசிலில் ஒரேநாளில் 50 ஆயிரம் பேருக்குத் தொற்று: 1,212 பேர் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 49,298 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 34,56,652 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 20 ஆகஸ்ட், 2020 at 12:29 PM
Brazil reports nearly 50,000 new Covid-19 cases
பகிர்:

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 49,298 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 34,56,652 ஆக உயர்ந்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

Advertisement

அதன்படி, பிரேசிலில் இன்று புதிதாக 49,298 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 34,56,652 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் ஒரே நாளில் 1,212 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 1,11,100 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் இதுவரை 24 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.