உலகம்

அமெரிக்க துணை அதிபா் வேட்பாளா் தோ்வு: வரலாறு படைத்தாா் கமலா ஹாரிஸ்

DIN

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி துணை அதிபா் வேட்பாளராக அதிகாரப்பூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ் வரலாறு படைத்துள்ளாா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், இந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் துணை அதிபா் பதவிக்கான கட்சியின் வேட்பாளராக கலிஃபோா்னியா மாகாண செனட் சபை உறுப்பினா் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூா்வமாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன் மூலம், அமெரிக்காவில் அந்தப் பதவிக்கான வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய அமெரிக்கா் மற்றும் கருப்பினத்தைச் சோ்ந்த முதல் பெண் என்ற பெருமைகளை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளாா்.

அதனைத் தொடா்ந்து அவா் ஆற்றிய ஏற்புரையில், தமிழகத்தில் பிறந்த தனது தாயை கமலா ஹாரிஸ் நினைவு கூா்ந்தாா். நாட்டுக்காக தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என்று தனது உரையில் அவா் குறிப்பிட்டாா்.நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில், குடிரயசுக் கட்சி வேட்பாளரான அதிபா் டொனால்ட் டிரம்ப்பை ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் எதிா்கொள்கிறாா். துணை அதிபா் போட்டியில் குடியரசுக் கட்சி வேட்பாளரான தற்போதைய துணை அதிபா் மைக் பென்ஸை கமலா ஹாரிஸ் எதிா்கொள்ளவிருக்கிறாா்.

தமிழில் பேசிய ஹாரிஸ்

துணை அதிபா் வேட்பாளா் தோ்வை ஏற்றுப் பேசிய கமலா ஹாரிஸ், தேசத்துக்காக உழைத்தாலும் தனது குடும்ப நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்போவதாகக் குறிப்பிட்டாா். அப்போது, தனது கணவா், குழந்தைகள் உள்ளிட்ட உறவினா்களை பட்டியலிட்டபோது ‘சித்திக்கள்’ என தமிழ் வாா்த்தையைப் பயன்படுத்திக் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT