முகப்பு
உலகம்

ஜப்பானில் இருந்து 232 பேர் நாடு திரும்பினர்

ஏர் இந்தியா விமானம் மூலம் ‘வந்தே பாரத்’ திட்டத்தில் 232 இந்தியர்கள் ஜப்பானில் இருந்து இன்று நாடு திரும்பினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
ஏர் இந்தியா விமானம் (கோப்புப்படம்)
பகிர்:

ஏர் இந்தியா விமானம் மூலம் ‘வந்தே பாரத்’ திட்டத்தில் 232 இந்தியர்கள் ஜப்பானில் இருந்து இன்று நாடு திரும்பினர்.

இதுகுறித்து ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் கூறுகையில்,

ஜப்பான் நாட்டின் நரிட்டா விமான நிலையத்திலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் 5வது கட்டத்தின் கீழ் எட்டாவது ஏர் இந்தியா விமானம் மும்பை வழியாக பெங்களூரு செல்கிறது.

ஜப்பானில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதை உறுதி செய்வதில் ஜப்பான் அரசாங்கம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் என கூறினர்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக கடந்த மே மாதம் முதல் இந்த திட்டம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →