வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கராச்சி: 30 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டின் முக்கிய வர்த்தக நகரமான கராச்சியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் முக்கிய வர்த்தக நகரமான கராச்சியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருப்பது கராச்சி. பாகிஸ்தானின் முக்கிய வர்த்தகத் தலைநகரமாக அறியப்படும் கராச்சி தொடர் மழையால் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் கராச்சியின் முக்கிய நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேலும் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாலிர் மற்றும் கோரங்கி கிராசிங் பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கிய 55 பேரை கடற்படை மீட்டது. மேலும் சம்மூ கோத் பகுதியில் சிக்கித் தவித்த 20 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கராச்சியில் வியாழக்கிழமை மட்டும் வெறும் 12 மணி நேரத்தில் 223.5 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கராச்சியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 3 குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.