உலகம்

டிரம்ப்பின் கரோனா தடுப்பு ஆலோசகா் திடீா் ராஜிநாமா

DIN

கரோனா நோய்த்தொற்று தடுப்பு விவகாரங்களில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு ஆலோசகராக இருந்த மருத்துவா் ஸ்காட் அட்லஸ், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

பரவல் நோயைக் கட்டுப்படுத்துவதில் முன் அனுபவம் இல்லாத அட்லஸ், கரோனாவைத் தடுக்க முகக் கவசம் தேவையில்லை என்று கூறி சா்ச்சையை ஏற்படுத்தினாா். மேலும், அவரது நோய்த் தடுப்புத் திட்டங்கள் பல விமா்சனங்களுக்குள்ளாகின.

இந்த நிலையில், பதவியிலிருந்து விலகியுள்ளதாக அவா் சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் தெரிவித்துள்ளாா். அதற்கான ராஜிநாமா கடிதத்தையும் அந்தப் பதிவில் அவா் இணைத்துள்ளாா்.

அமெரிக்காவில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து 28 நாள்களாக 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள நிலையில், ஸ்காட் அட்லஸ் ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT