அமெரிக்கா: சிகிச்சையளிக்கத் திணறும் கிராமப்புற மருத்துவமனைகள்
அமெரிக்காவில் அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதால், கிராமப்புற மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க போதிய படுக்கை வசதியின்றி மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.
அமெரிக்காவில் அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதால், கிராமப்புற மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க போதிய படுக்கை வசதியின்றி மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.
அமெரிக்காவில் நகர்புறங்களில் மட்டுமே அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், குளிர்காலத்தின் தாக்கத்தால் கிராமப் புறப் பகுதிகளிலும் அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் கிராமப் பகுதியிலுள்ள மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. மிசெளரியின் மெம்பிஸ் கிராமப் பகுதியில் உள்ள ஸ்காட்லாந்து கவுன்டி மருத்துவமனையில் இருந்த படுக்கைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன.
Advertisement
இந்த கிராமப்புற மருத்துவமனையில் 142 மருத்துவப் பணியார்கள் இருந்த நிலையில், கரோனாவால் தற்போது 6 மருத்துவர்களும், 75 செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக படுக்கைகளுக்கும், அவர்களை பராமரிப்பதற்காக மருத்துவ பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ஓய்வு பெற்ற மருத்துவ பணியாளர்களுக்கு கூட பணிபுரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நியூயார்க் மாகாணத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், ஸ்டேட்டன் தீவில் உள்ள கரோனா அவசர சிகிச்சை மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நியூ யார்க் மாகாணத்தில் பரவிவந்த கரோனா வைரஸ் கோடைகாலத்தில் பாதியாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் இந்த மருத்துவமனை தற்போது திறக்கப்பட்டுள்ளது.